அதிபர் டிரம்ப் பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்படும் உத்தரவில் கையெழுத்திட்டார்...!!!
அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
அந்த உத்தரவு மத்திய அரசின் தணிக்கையை முடிவுக்கு கொண்டுவருகிறது.
இணையத்தில் பேச்சுரிமையை கட்டுப்படுத்தியதற்காக முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தை திரு.டிரம்ப் கடுமையாக சாடியிருந்தார்.
பைடனின் நிர்வாகம் ஆன்லைன் தளங்களில் சுதந்திரமான பேச்சுரிமையை ஒடுக்குவதை ஊக்குவிப்பதாக டிரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சி கூட்டாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.