பாகிஸ்தானில் நிலவி வரும் மோசமான காற்றின் தரத்தால் பொது மக்களுக்கு ஆபத்து...!!!
பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் மோசமான காற்றின் தரம் நிலவி வருவதன் காரணமாக ஆரம்பப் பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மோசமான காற்று மாசுபாட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை 14 மில்லியன் இருக்கும் நகரத்தில் காற்றின் தரம் பல நாட்களாக மோசமாக உள்ளது.
காற்று மாசுக் குறியீடு 300க்கு மேல் இருப்பது ஆபத்தைக் குறிக்கிறது.
லாகூரில் சனிக்கிழமை (2 நவம்பர்) குறியீட்டு எண் 1,000 ஐ எட்டியதாக IQAir தரவு காட்டுகிறது.