மசாலா பொருளில் பிளாஸ்டிக்கா!! திரும்ப பெறப்பட்ட உணவு!!
சிங்கப்பூர் உணவு அமைப்பு தென்னாப்பிரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு விநியோகமாகும் Cape Herp&spice உணவுப் பொருளை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளது.
உணவுப் பொருளில் பிளாஸ்டிக் துண்டுகள் இருக்கலாம் என்று கூறப்பட்டது.
அந்தப் பொருளை இறக்குமதி செய்யும் Q.B.Food Trading Pte Ltd நிறுவனம் அது குறித்து உணவு அமைப்பிடம் கூறியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அமைப்பு பாதிக்கப்பட்ட உணவு பொருட்களை மீட்க உத்தரவிட்டதாகவும் , உத்தரவின் பேரில் உணவுப் பொருள்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டது.