பிலடெல்பியாவில் விமான விபத்து!! மூவர் கவலைக்கிடம்!!

பிலடெல்பியாவில் விமான விபத்து!! மூவர் கவலைக்கிடம்!!

ஜனவரி மாதம் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மருத்துவ உதவி விமானம் ஒன்று மெக்சிகோவுக்கு சென்று கொண்டிருந்த போது விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் பிலடெல்பியாவில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது.

அந்த விமான விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.மருத்துவமனையில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விமானத்தில் இருந்த ஆறு பேர் மற்றும் விமானம் கீழே விழுந்த இடத்தில் இருந்த ஒருவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விபத்து எவ்வாறு நடந்தது என்ற காரணத்தை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==