AI தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் படங்களுக்கும் ஆஸ்கர் விருது வழங்க முடிவு..!!!

AI தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் படங்களுக்கும் ஆஸ்கர் விருது வழங்க முடிவு..!!!

செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் தயாரிக்கப்பட்ட படங்கள் ஆஸ்கார் விருதுகளை வெல்லக்கூடும் என்று ஆஸ்கார் விருது ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயத்தில் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் புதிய
விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்னணு கருவிகளின் பயன்பாடு ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படுவதற்கான வாய்ப்புகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது மனிதர்களின் பங்களிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று கழகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுகளில், தி ப்ரூடலிஸ்ட் படத்திற்காக எடிரியன் பிரோடி சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

அவரை ஹங்கேரிய மொழியில் பேச வைக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டது.

இது பரவலாக விவாதிக்கப்பட்டதால் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.