கம்போடிய கிராமவாசிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட NUS மாணவர்கள்..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளி மாணவர்களும் WS Audiology மாணவர்களும் இணைந்து கம்போடிய கிராம மக்களுக்கு உதவியுள்ளனர்.
கம்போடியாவின் பொய்ப்பெட் கிராமத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோருக்கு செவித்திறன் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 10 சதவீத பேருக்கு செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்களில் 85 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோருக்கு காது கேட்கும் கருவிகள் பொருத்தப்பட்டன.
அதனால் பல வருடங்களுக்குப் பிறகு அவர்களால் தெளிவாகக் கேட்க முடிந்தது.
கிராம மக்களுக்கு முக்கிய மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.