NTUC ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த உதவும் நடவடிக்கை...!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் புதிய முயற்சிகளில் ஈடுபடுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் பொதுச்செயலாளர் இங் சீ மெங் கூறியுள்ளார்.
இளம் பணியாளர்கள் முதல் தொழில் வல்லுநர்கள் வரை, அவர்களின் தொழில் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டத்தில் உள்ள ஊழியர்களுக்காக வேலை இடங்களில் பயிற்சி கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
1100-க்கும் மேற்பட்டோர் இத்தகைய உதவிகளை வழங்கும் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மெய்நிகர் வாழ்க்கை தொழில் வழிகாட்டுதல் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.