சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போருக்கு புதிய திட்டம்!!

சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போருக்கு புதிய திட்டம்!!

சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் இருப்பவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த விரும்புவோர் $20,000 வெள்ளி வரை உதவித்தொகை பெறலாம்.

இந்த ஒரு மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் கழகம் இந்த முயற்சியை தொடங்கியுள்ளது.

சிங்கப்பூரின் 10 சமூக மன்றங்களின் புத்தாக்கமான சமூக இடங்களை அமைக்கும் திட்டங்களுக்காக நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

புவாங்கோக், மவுண்ட்பேட்டன் மற்றும் தெங்கா போன்ற இடங்களும் இதில் அடங்கும்.

கேலாங் வெஸ்ட் சமூக மன்றத்தில் வயதானவர்களின் சக்கர நாற்காலிகளை பழுதுபார்த்து கொடுக்கப்படுகிறது.

இதுவரை மூன்று சக்கர நாற்காலிகள் பழுதுபார்த்து தேவைப்படுவோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்னோட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது.

கலாச்சார,சமூக, இளைஞர் துறை அமைச்சர் எட்வின் தோங் கூறுகையில்,
இந்த திட்டம் சமூகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு சவால்களை சமாளித்து முன்னேற்றம் அடைவதற்குரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்றார்.