சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் புதிய திட்டம்!!

சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் புதிய திட்டம்!!

சிங்கப்பூரில் பகிர்ந்தெடுக்கப்படும் பெற்றோர் விடுப்பு வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்கும்.

அரசாங்க செலவுடன் கூடிய கட்டாய இரண்டு வார தந்தையர் விடுப்பு திட்டமும் அதே நாளில் நடைமுறைக்கு வருகிறது.

சென்ற ஆண்டு தேசிய தினக் கூட்ட உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் குழந்தை வளர்ப்பு இணைச்சேமிப்பு சட்டத்தில் மாற்றங்கள் குறித்து அறிவித்திருந்தார்.

இந்தப் புதிய மாற்றத்தால் குழந்தை பிறந்த முதல் ஆண்டில் பெற்றோர்களுக்கு மொத்தம் 30 வாரம் அரசாங்க செலவிலான பெற்றோர் விடுப்பு கிடைக்கும்.

வேலை செல்லும் பெற்றோர்கள் பத்து வாரங்கள் வரை அரசாங்க செலவுகளுடன் விடுப்பை பகிர்ந்து கொள்ளலாம்.

மனிதவளம் மற்றும் வேலைச்சூழலை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் இரண்டு கட்டங்களாக அமல்படுத்தப்படும்.

முதல் கட்டம் ஏப்ரல் மாதம் முதல் தேதியில் தொடங்கும்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் தேதியில் அல்லது அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் ஆறு வாரங்கள் வரை விடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டாம் கட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி அமலுக்கு வரும்.

அந்த தேதியில் இருந்து பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர் 10 வாரங்கள் வரை விடுப்பை பகிர்ந்து கொள்ளலாம்.

பகிர்ந்தெடுக்கப்படும் விடுப்பு குழந்தைகள் பிறந்து 12 மாதங்களுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மகப்பேறு விடுப்பு முடிந்த பின்னரே இதைப் பயன்படுத்த முடியும்.