Marriage photo shoot: இப்பொழுது வீட்டில் திருமணம் பேச்சு எடுத்து விட்டால் சாப்பாடு என்ன போட போகின்றோம் என்பதற்கு முன்னதாகவே போட்டோகிராபி புக் செய்யும் நிலைக்கு உலகம் வந்துவிட்டது. முன்பெல்லாம் திருமண மேடையில் தான் விதவிதமாக போட்டோ எடுக்கும் நிகழ்வு நடக்கும்.
தற்பொழுது ப்ரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங் என விதவிதமாக பெயர் வைத்து சமூகத்தை சீரழிக்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இவையெல்லாம் ஒருபுறம் என்றால் போட்டோ எடுப்பதில் இருக்கும் விவரங்களை அறியாமல் தற்பொழுதுள்ள தம்பதிகள் விதவிதமாக போட்டோ எடுக்க ஆசைப்படுகின்றனர். இப்பேற்பட்ட சம்பவம் தான் ராஜஸ்தானில் வினையாக முடிந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் திருமணம் முடித்த தம்பதிகள், திருமணத்திற்கு பின்பு வித்தியாசமாக போட்டோ ஷூட் எடுக்க வேண்டும் என்பதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் 90 அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதியில் பழமையான ரயில் பாதை ஒன்று உள்ளது.
அதைச் சுற்றிலும் பச்சை பசேல் என்று இருக்கும் என்பதால், அங்க நின்று போட்டோ எடுக்க பிளான் செய்து மேலே சென்றுள்ளனர். அந்த நேரத்தில் ரயில் வராது என்று கணித்துக் கொண்டு அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே திடீரென ரயில் வந்துள்ளது.
அவர்கள் உறவினர்கள் இருவரும், ரயில் தந்த வாளத்தின் ஓரத்தில் ஒதுக்குப்புறமாக ஒதுங்க, புதுமண தம்பதியினர் இருவரும் பதட்டத்தின் காரணமாக 90 அடி பள்ளத்தில் குதித்து விட்டனர். ரயிலில் லோகோ பைலட் எனப்படும் பிரேக் போடும் வசதி இருந்ததால் இன்ஜின் டிரைவர் பிரேக் போட்டாலும், இவர்கள் பயத்தில் குதித்ததால் பள்ளத்தில் விழுந்தனர்.
உடனடியாக காவல்துறையினர் தீயணைப்புத் துறையினரை உதவிக்கு அழைத்து அவர்களை மருத்துவமனையில் சேர்த்த பொழுது இருவரும் படுகாயம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தம்பதியினர் சோசியல் மீடியாவை விட, தனிப்பட்ட வாழ்க்கை தான் முக்கியம் என்பதை எப்பொழுது உணர போகின்றார்கள் என்பது தெரியவில்லை.