UAE: ஐக்கிய அரபு எமிரேட் என்றாலே பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது. அதனால்தான் உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகளை இருப்பதற்காக பல்வேறு சிறப்பம்சங்களை கட்டுமானங்கள் மூலம் புகுத்தி வருகின்றது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான போக்குவரத்து அம்சங்கள், பாதுகாப்பான சூழ்நிலை, தங்குவதற்கான வசதிகள், ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை துபாயில் போதுமான அளவிற்கு இருக்கின்றன.
எனவேதான் கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகில் சிறந்த சுற்றுலா நாடுகளில் மிகவும் பாதுகாப்பான நாடு என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் துபாய் முதலிடம் பெற்றது. இதனோட நிறுத்தாமல் துபாய் இப்பொழுதும் சுற்றுலா பயணிகளுக்கான ஏராளமான அம்சங்களை ஆலோசித்து வருகின்றது.
இந்நிலையில் துபாயில் தற்பொழுது வெற்றிகரமாக தொழிலை நடத்தி வரும் சோபா ரியாலிட்டி எனப்படும் ப்ராபர்ட்டி நிறுவனம், தற்பொழுது துபாயில் 210 மில்லியன் திர்காம்ஸ் மதிப்பில் புதிய ஷாப்பிங் மாலை கட்டப் போவதாக அறிவித்துள்ளது.
தற்பொழுது துவங்கப்பட்டுள்ள கட்டுமான பணிகள் 2026 ஆம் ஆண்டு முடிக்கப்படும் என தோராயமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடிகள் பரப்பளவில் கட்டப்படும் இந்த ஷாப்பிங் மாலில் மக்களை கவரும் ஆடம்பர பிராண்டுகளின் கடைகள், ஜிம், விளையாட்டு மைதானங்கள், சூப்பர் மார்க்கெட், பிரபலமான பிராண்டுகளின் ஹோட்டல்கள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் ஆளாக மட்டுமல்லாமல் மக்களை கவரும் பச்சை பசேல் என்ற இயற்கை அம்சங்களுடன்,இயற்கை வெளிச்சத்துடன் ஒளி தரக்கூடிய பல்வேறு விளக்குகளை அமைத்துக் கட்டப்படுவதால் 2026 ஆம் ஆண்டில் ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இந்த மால் உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.