மெக்சிகோவில் புதிய சட்டம் அறிமுகம்!! வரவேற்கும் விலங்கு நல ஆர்வலர்கள்!!

மெக்சிகோவில் புதிய சட்டம் அறிமுகம்!! வரவேற்கும் விலங்கு நல ஆர்வலர்கள்!!

மெக்சிகோ சிட்டியில் மிகவும் பிரபலமாக நடைபெறும் காளை சண்டைக்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த சண்டைகளில் வழக்கமாக காளைகள் துன்புறுத்தப்படும்.

ஆனால் இந்த புதிய சட்டத்தின் மூலம் `ரத்தமின்மை’ அறிமுகப்படுத்தப்படுகிறது.

காளைகளை கொல்லவோ காயப்படுத்தவோ கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது.

அது ஒரு பெரிய மாற்றம்.

அந்த புதிய சட்டத்தின் படி காளைகளை காயப்படுத்தும் வாள், கத்தி போன்ற கூர்மையான எந்தவித ஆயுதங்களையும் பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை.


அதேபோல காளை சண்டைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நடக்கக்கூடாது என்றும் அதற்கு கால அவகாசம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

காளைச் சண்டைக்கு முழுமையாக தடை விதிக்கப்படும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்பார்த்தனர்.

எனினும் இப்போது அறிமுகம் செய்த இந்த புதிய சட்டத்தை அவர்கள் வெற்றியாக நினைக்கிறார்கள்.

உலகில் காளைச் சண்டைக்கான மிகப்பெரிய திடல் மெக்சிகோவில் உள்ளது.