இளநரை கருப்பாக்க இயற்கை ஹேர் டை!!

இளநரை கருப்பாக்க இயற்கை ஹேர் டை!!

இளநரை பிரச்சனை இருப்பவர்கள் கெமிக்கல் டை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையாக மருதாணி,அவுரி ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

அவற்றை பயன்படுத்துவதால் மிகுந்த நன்மை அளிக்கும்.

முதல் நாள் இரவே டீ டிகாஷன் தயாரித்து அதில் மருதாணியை ஊற வைக்க வேண்டும்.

அதை தலையில் தடவிய பிறகு ஒரு நாள் கழித்து அவுரியை பயன்படுத்த வேண்டும்.

நரை முடியை நிரந்தரமாக கருமையாக்கும் நேச்சுரல் ஹேர் டை.

தேவையான பொருட்கள்:

கரிய பவளம்- ஒரு துண்டு
நெல்லிக்காய் சாறு- 200 மில்லி.

செய்முறை;

கரிய பவளம் என்பது நல்ல கருமை நிறத்தில் கல் போன்ற அமைப்பில் கெட்டியாக இருக்கும்.

கரிய பவளம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

நெல்லிக்காயில் இருக்கும் விதையை நீக்கிவிட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு ஜூஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நெல்லிக்காய் சாறில் கரிய பவளத்தை போட்டு மூன்று மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.

அதன் பிறகு எடுத்துப் பார்த்தால் நல்ல டை போல ஊரில் கெட்டியாக இருக்கும்.

இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

இதை முடியில் அப்ளை செய்யும்போது தலைமுடி எண்ணெய் பசை இல்லாமல் இருக்க வேண்டும்.

நீங்கள் நார்மலாக டை எவ்வாறு பயன்படுத்துவீரர்களோ அவ்வாறு பிரஷ் பயன்படுத்தி இதனை அப்ளை செய்யலாம்.

நன்றாக அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஹெர்பல் ஷாம்பு போட்டு குளித்து விட வேண்டும்.

கரிய பவளம் இது கற்றாழையிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருள் ஆகும்.

கற்றாழையை வெட்டும்போது மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் வரும் இது பெரும்பாலும் விஷத்தன்மை கொண்டது ஆகும்.

அந்த மஞ்சள் நிற திரவத்தை சேமித்து பதப்படுத்தி செய்யப்படும் ஒரு பொருள் தான் இந்த கரிய பவளம் ஆகும்.

நெல்லிக்காயில் விட்டமின் சி மற்றும் ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருப்பதால் நாம் நெல்லிக்காயை பயன்படுத்துகிறோம்.