மியான்மர் நிலநடுக்கம் : தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!!

மியான்மர் நிலநடுக்கம் : தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!!

மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அன்பிற்குரியவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு அவர் அனுதாபம் தெரிவித்தார்.

நிலநடுக்க நிலவரம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சிங்கப்பூர் பிரதமர் அவரது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய சிங்கப்பூர் அரசு தயாராக இருப்பதாகவும் திரு.வோங் கூறினார்.

இது போன்ற நெருக்கடியான காலங்களில் ஒருவர் மற்றவருக்கு ஒன்றுபட்டு உதவுவதில் தான் ஆசியானின் வலிமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இருக்கும் சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பிரதமர் வலியுறுத்தினார்.

அதோடு உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகளை பின்பற்றி அதன் படி இருக்குமாறு அவர் சிங்கப்பூர் மக்களை கேட்டுக் கொண்டார்.

உதவி தேவைப்படுபவர்கள்
சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் 24 மணி நேரமும் செயல்படும் சேவையை தொடர்பு கொள்ளலாம் என்று பிரதமர் வோங் கூறினார்.