மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஏறக்குறைய சுமார் 1700 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுமார் 3400 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 300க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் ராணுவ அரசாங்கம் தெரிவித்தது.
55 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட மியான்மரின் பல பகுதிகளில் பாலங்கள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், ரயில்வே கட்டமைப்புகள் ஆகியவை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தின் போது கட்டட இடிபாடுகளில் சிக்கிய மக்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.