"சாம்பியன் டிராபியில் எனது பெயர் இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்தவில்லை"- சூரியகுமார் யாதவ்
ICC 2025 சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் அந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் நடத்த உள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.சூர்யகுமார் யாதவ் அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தேர்வு செய்யப்படாதது வருத்தமளிக்கவில்லை:
2025 சாம்பியன்ஸ் தொடரில் தனது பெயர் இல்லாதது குறித்து தான் வருத்தமடையவில்லை என்று சூரியகுமார் யாதவ் கூறியுள்ளார்.
ஏனெனில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அவர் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். நான் சிறப்பாக விளையாடி இருந்தால் ஒரு வேளை அணியில் இருந்திருப்பேன். அதேசமயம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள அணியில் இருக்கும் அனைவருமே சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் என்பதால் எனக்கு அது மகிழ்ச்சியையே அளிக்கிறது என்று கூறினார்.
“அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதே சமயம் நான் நன்றாக விளையாடியிருந்தால் அணியில் இருந்திருப்பேன். “அதைச் செய்யாததால் தகுதியான மற்றொரு வீரர் அந்த இடத்தில் இருக்கிறார்.” என்று கூறினார்.
சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடும் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். ஆனால் கொஞ்சம் மெதுவாக விளையாட வேண்டிய ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அவர் அரை சதம் கூட அடித்ததில்லை.ஆனால் 2023 பைனலில் அவர் ஆடிய ஆட்டத்தை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.