பூன் லே வீட்டில் நடந்த கொலை சம்பவம்!! 58 வயதுடைய நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது!!
பூன்லே அவென்யூவில் உள்ள ஒரு வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 56 வயது நபரை கொலை செய்ததாக 58 வயதுடைய நபர் மீது மார்ச் மாதம் 13-ஆம் தேதி (இன்று) குற்றம் சாட்டப்பட்டது.
உயிரிழந்த நபர் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்று cna செய்தித்தளம் தெரிவித்தது.
பிளாக் 187 இன் 11 வது மாடி வீட்டில் அந்த சம்பவம் நடந்தது. இச்சம்பவம் குறித்து 11 ஆம் தேதி காலை சுமார் 11.35 மணியளவில் காவல்துறைக்கு தகவல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் சென்ற போது அந்த நபர் பேச்சு மூச்சின்றி கிடந்ததாக அவர்கள் பார்த்ததாக கூறினர்.