இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தாய்!!
வியட்நாமில் தாய் ஒருவர் இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது இரு மகன்களையும் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
காவல்துறையினர் அவரிடம் விசாரணை தொடங்கியுள்ளது.
முதலில், இரண்டு வயது மகன் 2021 ஆம் ஆண்டு குளியல் அறையில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், ஆறு வயது மகன் 2023 ஆம் ஆண்டு அதேபோல நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இரண்டு மகன்களும் ஒரே விதமாக குளியலறையில் நீரில் மூழ்கி உயிரிழந்ததை காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர்.
44 வயதுடைய திருமதி தோ தி தை நா அந்த பெண்மணிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.
அவருடைய கணவர் 2019 ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.
அவர் இன்சூரன்ஸ் திட்டத்திலிருந்து சுமார் 400 மில்லியன் வியட்னாமிய டோங் அதாவது சிங்கப்பூர் வெள்ளி மதிப்பின்படி 20000 வெள்ளி வசூலிப்பதற்காக இரண்டு மகன்களையும் கொலை செய்ததாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த இரண்டு உயிரிழப்பும் ஒரே மாதிரியாக இருந்ததால் தாயின் மீது சந்தேகமடைந்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.