மலேசியாவில் சாலையில் உயிரிழந்த கிடந்த தாய்,சேய்!!

மலேசியாவில் சாலையில் உயிரிழந்த கிடந்த தாய்,சேய்!!

மலேசியாவில் பிரசவத்தின் போது தாய்,சேய் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

தாய் குழந்தையை கையில் பிடித்தபடி உயிரிழந்துள்ளார்.

இருவரும் சாலையில் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்த அலுவலக ஊழியர் ஒருவர் உடனடியாக உதவிக்கான அழைப்பு விடுத்தார்.

தகவல் அறிந்த துணை மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அவர்கள் பரிசோதித்துவிட்டு தாயும் சேயும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

தாயும் சேயும் உயிரிழந்ததாகக் கருதப்படும் இடம் விசாரணைக்காக சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு சென்ற தடயவியல் நிபுணர்கள் சம்பவம் குறித்த ஆதாரங்களை தேடியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என மலேசிய போலீசார் தெரிவித்துள்ளனர்.