ஜப்பானில் இன்னும் பனிப்பொழிவு அதிகரிக்கலாம்!! மக்களுக்கு எச்சரிக்கை!!
ஜப்பானில் பனிப்பொழிவு மற்றும் காற்று அதிக அளவில் கடுமையாக இருக்கும், ஜப்பான் கடலில் வீசும் குளிர் காற்று காரணமாக பனிப்புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நாள் முழுவதும் பனிமூட்டம் அதிக அளவில் உருவாகும் என்றும் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை குளிர்ந்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் பனிப்பொழிவு மேலும் அதிகரித்து பனி வழக்கமாக பெய்யாத இடங்களில் கூட அதிகளவில் பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது.
6 மணி நேரத்திற்குள் ஒரு நகரில் 29 சென்டிமீட்டர் பனி கொட்டியுள்ளதாக ஜப்பான் ஊடகம் ஒன்று தெரிவித்தது.