வீட்டில் இறந்து கிடந்த நபர்!! இறந்தவரின் சகோதரர் கைது!!

வீட்டில் இறந்து கிடந்த நபர்!! இறந்தவரின் சகோதரர் கைது!!

மார்ச் மாதம் 11-ம் தேதி அன்று பூன் லேயில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழக வீடு ஒன்றில் ஆடவர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.

இறந்தவருடைய சகோதரர் (58) கைது செய்யப்பட்டார்.

பிளாக் நம்பர் 187 பூன் லே அவென்யூ வில் உள்ள 11 வது மாடியில் உள்ள வீட்டில் 56 வயதுடைய ஆண் ஒருவர் அசைவில்லாமல் கிடந்தார்.

சம்பவம் இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது .

முற்பகல் 11.35 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் மற்றும் இறந்தவர் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

சம்பவ இடத்திலேயே காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்தனர்.

காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.