செலவில்லாம முகம் பொலிவாகனுமா? அப்போ இது உங்களுக்கு தான்!!

செலவில்லாம முகம் பொலிவாகனுமா? அப்போ இது உங்களுக்கு தான்!!

இந்த ஐந்து ஸ்க்ரப்களில் ஒன்று போதும் ஒட்டு மொத்த இறந்த செல்களும் நீங்கி முகம் பளபளப்பாக ஜொலிக்கும்.

ஸ்கிரப்பை பொருத்தவரை அனைவரும் செய்யும் தவறு என்னவென்றால் சிலர் சருமத்திற்கு ஸ்கிரப் பயன்படுத்தி இறந்து செல்களை நீக்குவது இல்லை.

சிலர் அடிக்கடி ஸ்கிரப்புகளை பயன்படுத்துவார்கள்.

அவ்வாறு தினசரி ஸ்கிரப்புகளை பயன்படுத்துவதால் சருமம் அதிக அளவு பாதிக்கப்படும்.

அதனால் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மென்மையாக ஸ்கிரப்புகளை பயன்படுத்தி சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கலாம்.

▫️ப்ரௌன் சுகர் ஸ்கிரப்
▫️காபி ஸ்கிரப்
▫️ஓட்ஸ் ஸ்கிரப்
▫️பப்பாளி ஸ்கிரப்
▫️அரிசி மாவு ஸ்கிரப்

ப்ரௌன்சுகர் ஸ்கிரப்:

ப்ரௌன்சுகர் ஸ்கிரப் சருமத்தில் மிகச் சிறப்பாக வேலை செய்து இறந்த செல்களை நீக்கும்.

பிரவுன் சுகர் சருமத்திற்கு மென்மையான ஸ்கிரப் ஆக இருக்கும்.

ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் பிரவுன்சுகர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

பிறகு விரல்களால் மென்மையாக ஸ்கிரப் செய்து மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் நம் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்குவது மட்டும் இல்லாமல் நமது சருமம் ஸ்மூத்தாகவும் சாப்டாகவும் மாறும்.

காபி ஸ்கிரப்:

உங்களுடைய சருமத்திற்கு சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது. எல்லா வகை சருமத்திற்கும் இந்த காபி ஸ்கிரப் உகந்ததாகும்.

இந்த ஸ்கிரப் பயன்படுத்துவதன் மூலம் இறந்த செல்கள் முழுமையாக நீங்கி சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் ஒரு ஸ்பூன் காபித்தூள் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

பிறகு விரல்களால் ஒரு சில நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.

வாரத்திற்கு ஒருமுறை முறை இவ்வாறு செய்யலாம்.

ஓட்ஸ் ஸ்கிரப்:

ஓட்ஸ் ஸ்கிரப் சென்சிட்டிவ் சருமத்திற்கு ஏற்ற மிகச் சரியான ஸ்கிரப் ஆகும்.

ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் பொடி செய்த ஓட்ஸை சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் தயிர் கலந்து நன்கு மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்து மென்மையாக ஸ்கிரப் செய்ய வேண்டும்.

பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.

பப்பாளி ஸ்க்ரப்:

பப்பாளியில் இருக்கும் இயற்கையான என்சைம்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது.

ஒரு சிறிய துண்டு பப்பாளி பழத்தை எடுத்து நன்கு கூழாக மசித்து அதோடு சிறிது தேனும் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து அதை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதால் அது சருமத்தில் உள்ள பிக்மென்டேஷன், டெட் செல்கள் நீங்கி சருமத்தின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

அரிசி மாவு ஸ்கிரப்:

அரிசி மாவு காலம் காலமாக பயன்படுத்தப்படுகிற ஒரு அற்புதமான ஸ்கிரப் ஆகும்.

ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் சிறிது பால் கலந்து மிக்ஸ் செய்து சருமத்தில் தடவி அதை விரல்களால் நன்கு மசாஜ் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.