லண்டன் ஹீத்ரோ விமான நிலையம்: மீண்டும் தொடங்கிய விமானச் சேவைகள்!!

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம்: மீண்டும் தொடங்கிய விமானச் சேவைகள்!!

பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கி விட்டன.

விமான நிலையத்தின் அருகில் இருக்கும் துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் விமான நிலையத்தில் மின்சாரம் தடைப்பட்டது.

மின் தடை ஏற்பட்டதால் சுமார் 18 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் சுமார் 2 லட்சம் பயணிகள் பாதிப்படைந்தனர்.

விமான நிலையத்தின் தலைவர், இதுவே ஹீத்ரோ விமான நிலையத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சம்பவம்,
இந்த இடையூறுக்கு மன்னிப்பு கேட்டார்.

இப்போது விமான சேவைகள் குறிப்பிட்ட அளவில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மற்ற ஐரோப்பாவின் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்களை ஹீத்ரோ விமான நிலையத்திற்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டது.
சேவைகள் இன்று முழு வீச்சில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனின் போக்குவரத்து துறை அமைச்சர், இந்த சம்பவம் ஹீத்ரோ விமான நிலையத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை விமான நிலையம் கையாண்ட விதத்தையும் ஆதரித்தார்.