ஒரு படத்தை முடிக்க இரண்டு,மூன்று வருடங்களாக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு வருடத்திற்குள்ளே முடிக்கும் இயக்குநர்!!
தமிழ் சினிமாவில் இப்போது உள்ள இயக்குநர்களின் முன்னணி பட்டியலில் ஐந்து இடங்களுக்குள் இருப்பவர் லோகேஷ் கனகராஜ்.
சீனியர் இயக்குநர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறிவிட்டார் என்று கூட சொல்லலாம்.
ரஜினிகாந்த்துடன் இணைந்து முதல் முறையாக இயக்கியுள்ள படத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் படத்தை திட்டமிட்டபடி முடித்துள்ளார்.
`கூலி’ இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது.
சில இயக்குநர்கள் இரண்டு மூன்று வருடங்கள் ஒரு படத்தை இயக்க எடுத்துக் கொள்ளும் போது கனகராஜ் மட்டும் ஒரு வருடத்திற்குள்ளாகவே தனது படங்களை முடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அவர் முதன் முதலில் இயக்குநராக அறிமுகமான போது அவர் இயக்கிய படம் ‘மாநகரம்’ 45 நாட்களிலும், “கத்தி” திரைப்படம் 62 நாட்களிலும், “மாஸ்டர்” திரைப்படம் 129 நாட்களிலும், “விக்ரம்” திரைப்படம் 110 நாட்களிலும், “லியோ” திரைப்படம் 125 நாட்களிலும் முடித்துள்ளார்.
அதேபோல தற்போது இயக்கிய கூலி படத்தை 150 நாட்களில் முடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முழுமையான ஸ்கிரிப்ட்,சரியான திட்டமிடல் போன்றவற்றுடன் படப்பிடிப்பை முடித்துவிட்டு தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்ற பெயரையும் லோகேஷ் கனகராஜ் பெற்றுள்ளார்.
அடுத்ததாக கார்த்தி நடிக்க உள்ள “கைதி 2” படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.