கீர்த்தி சுரேஷ் நடந்து கொள்வது கணவருக்கு பிடிக்கவில்லையாம்…!!!

கீர்த்தி சுரேஷ் நடந்து கொள்வது கணவருக்கு பிடிக்கவில்லையாம்...!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி தனது 15 ஆண்டுகால நெருங்கிய நண்பரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர்கள் தாய்லாந்து சென்று வந்த ஹனிமூன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

பிரபலங்களின் திருமணம் என்றாலே ஆரம்பத்தில் ஆஹா ஓஹோ என்று இருக்கும். பின்பு மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவிப்பர்.அந்த வகையில் கடந்தாண்டில் தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து ஜெயம் ரவி-ஆர்த்தி தம்பதியினரின் விவாகரத்து அறிவிப்பானது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுபோன்ற சில தம்பதிகள் இருந்தாலும் கடைசி வரை அன்புடன் விட்டுக் கொடுத்து வாழ்ந்து காட்டும் தம்பதியினரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது கணவர் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் கீர்த்தி சுரேஷ், ஆண்டனியும் நானும் திருமணத்திற்கு முன்பே டேட்டிங் செய்து வந்ததால் ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம். அதனால் திருமணத்திற்கு பின்பு பெரிதாக எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லை.

நான் எப்பொழுதும் சோசியல் மீடியாவில் மூழ்கி இருப்பேன்.அது என் கணவருக்கு பிடிக்கவில்லை இருந்தாலும் அவர் என்னை புரிந்து கொள்ளக் கூடியவர் என்பதால் இதுவரை எதுவும் சொல்லவில்லை. மேலும் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வோம் என்பதால் எங்களது குடும்ப வாழ்க்கை எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.