கடல்துறை சார்ந்த மின்னிலக்கம்,குறைந்த கரிமப் பயன்பாடு குறித்த உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர்,இந்தியா!!
கடல்துறை சார்ந்த மின்னிலக்கம், குறைந்த கரிமப் பயன்பாடு ஆகியவற்றில் ஒத்துழைக்க சிங்கப்பூரும் இந்தியாவும் உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன.
கடல்துறை, துறைமுக ஆணையத்தை சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி தியோ இங் டியும், இந்தியாவின் கப்பல் துறை அமைச்சகத்தின் கூட்டு தலைமை செயலாளர் லட்சுமணனும் உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டனர்.
நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர். ஏமி கோர் அந்த நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
கடல்சார் மின்னிலக்கம், கரிமத்தைக் குறைவாக உபயோகிக்கும் திட்டங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கு அந்த குறிப்பு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பசுமை மின்னிலக்கக் கப்பல் பாதையை அமைக்கவும், எதிர்காலத்தில் இணக்கக் குறிப்பை உருவாக்குவதற்கும் இந்த உத்தேசக் குறிப்பு வழிவகுக்கும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா முன்னணி வகிக்கிறது.
பசுமை நிறைந்த கடல்துறைக்கு ஏற்றவாறு எரிவாயுவை அமைப்பதற்கான சாத்தியம் அங்கு உள்ளது என்று கடல்துறை, துறைமுக ஆணையம் வெளியிட்ட அறிக்கை கூறியது.