உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா…???

உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா...???

சிங்கப்பூர்: சிங்கப்பூர் உணவு விற்பனை நிலையங்களில் இடத்தை ஆக்கிரமிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்ற ஒரு செய்தி சமீபத்திய நாட்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இது தவறான தகவல் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அது தெளிவுபடுத்தியது.

மேஜைகளில் வேறு யாரும் இல்லையென்றால், இடத்தை ஆக்கிரமிக்க மேஜையில் ஏதாவது ஒரு பொருளை வைத்துவிட்டு, பின்னர் உணவு மற்றும் பானங்களை வாங்கச் செல்வது சிங்கப்பூர் உணவகங்களில் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

Choping என்று அழைக்கப்படும் இந்தச் செயலில், வாடிக்கையாளர்கள் டிஷ்யூ பேப்பர், பாட்டில்கள் போன்றவற்றை மேஜையில் வைப்பார்கள்.

பொதுவாக மற்றவர்களை கருத்தில் கொண்டு செயல்படுமாறு தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் மக்களைக் கேட்டுக் கொண்டது.