புதிதாக செடி நடுவதில் தெரிந்துகொள்ள விஷயம் இவ்வளவு இருக்கா?

பொது இடங்களில் செடி வைப்பது என்பது சமுதாய பணிகளில் ஒன்று ஆகும்.
அதை அனைவராலும் செய்த விட இயலாது.
ஆனால் உங்கள் வீட்டில் செடி வளர்ப்பதற்கு யோசிக்க வேண்டிய இல்லை. அப்படி இருந்தும் சிலர் இடங்களை வீணாக்கிக் கொண்டு இருப்பார்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் புதிய செடிகளை நடும்போது சில விஷயங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
விதைகளை விதைத்தும் செடிகள் வளரவில்லை என்றால் கிளைகளை வைத்து செடி துளிர்க்கவில்லையா என்று கவலை கொள்ள வேண்டாம்.
புதிதாக செடி வைப்பவர்கள் முதலில் மண்ணை வளப்படுத்த வேண்டும்.
உதிரியான மண்ணை தொட்டியில் நிரப்பி அதனை அழுத்தி விடாமல் அப்படியே விதைகளை போட வேண்டும் அதற்கு மேல் மண்ணை கொட்ட வேண்டும்.
இறுக்கமான மண்ணில் ஆக்சிஜன் கிடைக்காமல் செடி வளராது.
செடி வளர பயன்படுத்தும் கிளைகள் உரித்து வந்த உடனே அதை மண்ணில் நட்டு வைக்க வேண்டும்.
உதாரணத்திற்கு நீங்கள் நித்திய மல்லி செடியை வளர்க்க வேண்டும் என்றால் அந்தச் செடியின் ஒரு கிளையை ஒடித்து வரவேண்டும்.
அவ்வாறு ஒடித்து வந்த கிளைகளை சிறிது நேரத்திற்குள் நட்டு விட வேண்டும்.
அது வெளியிலேயே இருந்தால் அதன் வளரும் தன்மையை இழந்து விடும்.
முருங்கைச் செடி போன்ற காய்கறி செடிகளை இது போல் செய்யும் போது கிளையின் அடிப்பகுதியில் லேசாக வெட்டி விட்டு அதில் மாட்டின் சாணத்தை தடவ வேண்டும்.
அதற்கு பிறகு நட்டு வைத்து மேல் நுனியில் இதே போல வெட்டிவிட்டு பசும் சாணத்தை தடவி விட வேண்டும்.
அப்டி செய்யும் பொழுது அதன் கிளைகள் துளிர்விட ஆரம்பிக்கும்.
ரோஜா, மற்றும் நித்திய மல்லி போன்ற பூக்களை தரும் செடிகளை நட்டு வைக்கும் போது கிளைகளில் லேசாக வெட்டி விட்டு அதில் தேன் தடவ வேண்டும்.
சுத்தமான தேன் தான் இதற்கு பயன்படுத்த வேண்டும்.தேன் தடவிய இந்த செடிகளை நட்டு வைத்தால் வெகு விரைவாகவே செடிகள் பதிந்து புதிய கிளைகள் முளைக்க துவங்கிவிடும்.
எந்த வகை செடியாக இருந்தாலும் கிளைகளை ஒடித்து வந்து நடும்போது சிலைகளை கீழே லேசாக கத்தரித்து விட வேண்டும்.
அதில் தோல் நீக்கி உள்ளிருக்கும் வெள்ளை பகுதியானது வெளிவரும்.அதில் ஆலோவேரா செடியின் ஜெல் போன்ற பகுதியை பிரித்து எடுத்து ஏழு முறை அலசி விட வேண்டும்.
கற்றாழையை ஏழு முறை அலசுவதற்கான காரணம் அதில் இருக்கும் தேவை இல்லாத கசப்புகளை வெளியேற்றுவதற்காக தான்.
கற்றாழையை முகத்திற்கு பயன்படுத்துபவர்கள் கட்டாயம் இந்த ஜெல்லை இதுபோல் அலசி விட்டு பயன்படுத்த வேண்டும்.
மண்ணில் தளர்வு மற்றும் வேருக்கு கொடுக்கக்கூடிய சத்துக்கள் தான் சில நாட்களிலேயே அந்தச் செடியை துளிர்க்க செய்கிறது.
FOLLOW US ON MORE :
Telegram id : https://t.me/sgnewsinfoo
Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL
Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==