ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தாரா ரோஹித் சர்மா?

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தாரா ரோஹித் சர்மா?

ஐபிஎல் டி20 தொடரின் 18 ஆவது சீசன் இந்த வாரம் சனிக்கிழமை 22 ஆம் தேதி அன்று தொடங்குகிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருக்கும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

மார்ச் மாதம் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஐந்தாவது முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த டி20 தொடரில் இந்திய கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரருமான ஹிட்மேன் ரோஹித் சர்மா மட்டும் அணியுடன் இதுவரை கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இந்த நிலையில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நேற்று இணைந்துள்ளார்.

இதனை அந்த அணியின் நிர்வாகம் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.