IPL 2025: லைவ் நடுவே ரசிகர் செய்த செயல்!!

IPL 2025: லைவ் நடுவே ரசிகர் செய்த செயல்!!

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது.

இந்த போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்றது.

இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் ரியான் பராக்கின் சொந்த மாநிலம் ஆகும்.

இந்த போட்டியின் போது ரியான் பராக் பந்து வீசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் விளையாட்டு அரங்கிற்குள் அத்துமீறி நுழைந்து ஓடி வந்தார்.

ரியான் பராக் பந்து வீச ஓடி வந்தார்.

பின்னர் அவரை ராஜஸ்தான் வீரர்கள் எச்சரித்ததை அடுத்து பந்து வீசுவதை நிறுத்திவிட்டு பின்னே பார்த்தார்.

அப்போது வேகமாக ஓடி வந்த அந்த ரசிகர் நேராக ரியான் பராக் அருகே வந்து அவரை கட்டி அணைத்துக் கொண்டார்.

அதோடு அவரது காலில் விழுந்து வணங்கினார்.

இந்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு முன்னர் விராட் கோலி, ரோஹித் சர்மா, டோனி,கே.எல்.ராகுல் ஆகியோர்களின் ரசிகர்கள் கட்டி அணைத்து காலில் விழுந்து வணங்கிய நிகழ்வுகளை தான் பார்த்திருக்கிறோம்.

முதல்முறையாக 23 வயதான வீரர் ஒருவரை ,ரசிகர் ஒருவர் காலில் விழுந்து வணங்கியதும், கட்டி அணைத்ததும் அவருக்காக மைதானத்தில் அத்துமீறி நுழைந்ததும் எப்படி சாத்தியம் என்று பலர் வியப்பில் உள்ளனர்.

அசாம் மாநிலத்தில் இருந்து தேசிய அளவில் வளர்ந்த முதல் கிரிக்கெட் வீரர் ரியான் பராக் ஆவார்.

அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நீண்ட காலமாக விளையாடி வருவதோடு சமீபத்தில் இந்திய அணியிலும் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தார்.

அவருடைய இந்த கிரிக்கெட் வளர்ச்சி அசாம் மாநிலத்தில் பலருக்கும் மிகப்பெரிய ஊக்கமாக அமைந்திருக்கிறது.

அதன் காரணமாகவே ரசிகர் ஒருவர் அத்துமீறி வந்து அவரது காலில் விழுந்து வணங்கி இருக்கிறார்.

இந்த நிகழ்வை சமூக வலைத்தளங்களில் பலரும் கேலி செய்தும் வருகின்றனர்.மீம்ஸ் போட்டும் வருகின்றனர்.