IPL 2025 : DC vs LSG – இனி என்னுடைய கேப்டன்சியில் இப்படித்தான்……

IPL 2025 : DC vs LSG - இனி என்னுடைய கேப்டன்சியில் இப்படித்தான்......

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் டெல்லி மற்றும் லக்னோ அணி மோதிக்கொண்டது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் அடித்தது.

இந்த ஸ்கோரை எடுக்க முடியாமல் டெல்லி அணி தடுமாறியது.

அது 65 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

எனினும் டெல்லி அணியின் அசுதோஷ் சர்மா, விபராஜ் நிகம் ஆகியோர் அபாரமாக விளையாடி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற வைத்தனர்.

இந்த நிலையில் வெற்றி குறித்த கருத்து தெரிவித்துள்ள டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் அனைவரும் தயாராக இருங்கள் என்று கூறினார்.

ஏனெனில் என்னுடைய கேப்டன்ஷிப்பில் போட்டிகள் இப்படித்தான் இருக்கும் என்று அவர் கூறினார்.

எனவே எது வேண்டுமானாலும் நடக்கலாம் சில சமயங்களில் ரசிகர்கள் என் மீது கோபப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இப்போது நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். அதனால் யாரும் எங்களை எதுவும் கூற மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

பவர் பிளேவில் நான்கு விக்கெட்டுகளை இழந்த பின்னர் போட்டியை வெற்றி பெறுவது என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் கிரிக்கெட் என்பது மாறி வருகிறது.எனவே கிரிக்கெட் களத்தில் கடைசி வரை நின்று விளையாடுங்கள். அதேபோல உங்களது திறமைகளையும் வெளிப்படுத்துங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம்.

ஒரு சமயம் லக்னோ 250 ரன்னுக்கு மேல் அடிக்க மாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் 200 நாட்கள் வரை சுற்றி தான் அடிக்கவிட்டோம். இதன் மூலம் எங்கள் அணி வீரர்கள் நம்பிக்கை பெற்றார்கள்.