யானை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.ஆனால் அதன் பிரம்மாண்ட உருவம் நம்மை அறியாமல் சற்று பயத்தை ஏற்படுத்தி விடும்.கேரளாவில் யானை மங்களகரமானதாக கருதப்படுகிறது. கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் சில யானை இனங்கள் அருகி வருகின்றன. இதனால் யானைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி யானைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
யானைகள் பற்றிய தகவல்கள்:
🐘 யானைகளில் மொத்தம் இரண்டு வகை உள்ளது ஒன்று ஆப்பிரிக்க யானை மற்றொன்று ஆசிய யானை.
🐘 ஆண் யானைக்கு களிறு என்றும் பெண் யானைக்கு பிடி என்றும் பெயர்.
🐘 ஆப்பிரிக்க யானை உருவத்தில் ஆசிய யானைகளை விட பெரியதாக இருக்குமாம்.
🐘 ஆப்பிரிக்க யானைகள் 7000 கிலோ எடை கொண்டதாகவும் 13 அடி உயரம் கொண்டதாகவும் இருக்கும்.
🐘 ஆசிய யானைகள் 6000 கிலோ எடை கொண்டதாகவும் 11 அடி உயரம் கொண்டதாகவும் இருக்கும்.