மாலத்தீவு இந்திய துணை கண்டத்தின் தென்மேற்கே அமைந்துள்ள ஒரு குடியரசு நாடாகும்.
இது கிட்டத்தட்ட 1200 தீவுகளைக் கொண்டுள்ளது.
அவற்றில் பெரும்பாலான தீவுகள் மக்கள் வசிக்காதவை ஆகும்.
எந்த பவளத் தீவுகளும் கடல் மட்டத்திலிருந்து 1.8 மீட்டர் அதாவது ஆறு அடி உயரத்திற்கு மேல் இல்லை இதனால் பூமி வெப்பமடைதலுடன் தொடர்புடைய கடல் மட்ட உயர்வுக்கு நாடு பாதிக்கக்கூடியதாக உள்ளது.
2008 ஆம் ஆண்டு நீண்ட காலமாக ஜனாதிபதியாக இருந்த மௌமூன் அப்துல் கயூமின் தேர்தல் தோல்விக்கு பின்னர் அதன் அரசியல் வரலாறு நிலையற்றதாகவே உள்ளது.
இதன் பரப்பளவு 300 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்குள்ள மக்கள் தொகை 3,92,000 ஆகும்.
அங்கு உள்ள மொழிகள் திவேஹி மற்றும் ஆங்கிலம் ஆகும்.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹை தோற்கடித்த பிறகு முகமது முய்சு மாலத்தீவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மாலத்தீவு நீண்ட காலமாக இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்தின் கீழிருந்து வருகிறது.
டெல்லி மற்றும் பெய்ஜிங் ஆகிய இரண்டும் மாலத்தீவுக்கு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு கடன்கள் மற்றும் மானியங்கள் வடிவில் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.