Indian INS: ஜூலை 15ஆம் தேதி எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்த கப்பல் ஒன்று ஓமன் நாட்டிற்கு உட்பட்ட கடல் பகுதிக்குள் வந்த பொழுது கவிழ்ந்ததால் கப்பலில் பயணித்த 13 இந்தியர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் கடலில் மூழ்கினர் என்ற செய்திகள் வெளியாயின.
ஓமன் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகத்திற்கு எண்ணெயினை இறக்க வந்து கொண்டிருந்த பொழுது துறைமுகத்தை அடைவதற்கு முன்பாகவே, கப்பல் விபத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து இந்திய நாட்டுக்கு கப்பல் படையினரிடம் ஓமன் சார்பில் உதவி கேட்கப்பட்டது. இதனை அடுத்து உடனடியாக இந்திய போர்க்கப்பலான INS சம்பவ இடத்திற்கு விரைந்தது.
பல்வேறு மணி நேரங்களுக்கு பிறகு நடந்த போராட்டத்தில், இந்தியாவைச் சேர்ந்த எட்டு பேரையும், இலங்கையைச் சேர்ந்த ஒருவரையும் மீட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
117 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பலானது சிறிய ரகத்தைச் சேர்ந்த கப்பல் ஆகும். கொமரோஸ் எனப்படும் நாட்டைச் சேர்ந்த இந்த கப்பலின் பெயர் பிரெஸ்டிஜ் பால்கன் என்பதாகும். விபத்தில் இந்த கப்பல் தலைகீழாக கவிழ்ந்ததாகவும், அதில் உள்ளவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய கப்பல் படையினர் பாடுபட்டு பல்வேறு உயர் ரக கருவிகளின் மூலம் அதிர்ஷ்டவசமாக உயிர்களை மீட்டுள்ளது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.