சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட்டில் மிக அதிகமான மழைப்பொழிவு!!

சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட்டில் மிக அதிகமான மழைப்பொழிவு!!

சிங்கப்பூரில் மார்ச் மாதம் 20 ஆம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 21.9 டிகிரி செல்சியஸ் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மார்ச் மாதம் 19ஆம் தேதி அன்று தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக சிங்கப்பூரில் பல இடங்களில் மழை பெய்கிறது.

நேற்றைப் போலவே இன்றும் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துவாஸ் சவுத் பகுதியில் மார்ச் 20ஆம் தேதி மிகவும் அதிகமான வெப்பநிலை பதிவானது.

25. 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக கூறப்படுகிறது.

பத்து மணிக்கு 21.9 டிகிரி செல்சியஸ் பதிவானது என்று வானிலை ஆய்வு மையத்தின் இணைய பக்கத்தில் கூறியது.

ஜுரோங் வெஸ்ட் பகுதியில் மிகவும் கடுமையான மழைப்பொழிவானது என்று தண்ணீர் அமைப்பான PUB தெரிவித்தது.

மவுண்ட்பேட்டன் ரோடு தீவு விரைவு சாலையின் சில பகுதிகள் இருக்கும் வட்டாரங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

தேசிய சுற்றுப்புற அமைப்பு இந்த மாதம் தொடர்ந்து அதிகப்படியான மழையை எதிர்பார்க்கும் என்று தெரிவித்தது.