ஹீத்ரோ விமான நிலையம் மூடல்!! விசாரணைக்கு உத்தரவு!!
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் மின்தடை காரணமாக மூடப்பட்டது. விமான நிலையம் மூடப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு இருக்கலாம் என்று பொதுப்பயனீட்டு நிறுவனமான National Grid- இன் தலைவர் கூறியுள்ளார்.
விமான நிலையத்தில் போதுமான அளவு மின்சார விநியோகம் இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
நார்த் ஹைட் துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் விமான நிலையத்தில் மின்தடை ஏற்பட்டு விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
ஆனால் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் மேலும் 2 துணை மின்நிலையங்களில் எந்த தடங்கலும் ஏற்படவில்லை என்று National Grid- நிறுவனத்தின் தலைவர் கூறினார்.
விமான நிலையத்திற்கு தேவையான மின்சாரத்தை அந்த இரண்டு துணை மின் நிலையங்களால் வழங்க முடியும் என்றார்.
இதற்கிடையில், ஒரு நகரத்திற்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதோ அதே அளவு மின்சாரம் விமான நிலையத்திற்கும் பயன்படுத்துவதாக என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி தோமஸ் வோல்ட்பை (Thomas Woldbye) குறிப்பிட்டார்.
விமான நிலையத்தில் வழங்கப்படும் பிற சேவைகளுக்கு துணை மின்சார விநியோகம் இல்லாததை அவர் சுட்டிக் காட்டினார்.
விமான நிலையம் மூடப்பட்டது குறித்து விசாரணை நடத்த அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் மாதம் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம் நேற்று மார்ச் மாதம் 23 தேதி திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.