ஏப்ரல் 10 ரெடியா இருங்க..!!! புதிய வசதிகளுடன் பட்டய கிளப்ப வரும் vivo V50e மாடல்..!!!

இந்திய மார்க்கெட்டில் களமிறங்க இருக்கும் புதிய Vivo V50e மொபைல் போன் அட்டகாசமான வசதியுடன் வருகிறது. இந்த மொபைல் போனின் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த போன் ஏப்ரல் 10 ஆம் தேதி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வர உள்ளது. அமேசான் தளத்திலும் அதன் விற்பனையை தொடங்கவுள்ளது.விவோ நிறுவனம் இதன் முக்கிய அம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது.இந்த வகை மொபைல் போனில் 3D அல்ட்ரா-ஸ்லிம் குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளே கேமரா பிரியர்களுக்கான முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த VivoV50e போனின் முழு விவரங்களையும் இப்போது நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
Vivo V50e மொபைல் போனின் புதிய அம்சங்கள்:
இந்த Vivo ஒரு அல்ட்ரா-ஸ்லிம் குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. எனவே, இது 7.3mm தடிமன் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இது பிரீமியம் நைட் போட்டோகிராபி மற்றும் போர்ட்ராய்டு போட்டோகிராபிக்கு ஏற்ற ஆரா லைட்டைக் கொண்டுள்ளது.
மெயின் கேமராவானது சோனி IMX882 சென்சார் மற்றும் சோனி மல்டிபோகல் ப்ரோ போர்ட்ரெய்ட்டுடன் கிடைக்கிறது.இந்த கேமராவில் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உள்ளது. எனவே பின்புற கேமரா காட்சிகள் பிரீமியம் ஆகவே உள்ளது.
Vivo V50e ஸ்மார்ட்போன், i-ஆட்டோ ஃபோகஸ் மற்றும் குரூப் செல்ஃபி ஆதரவுடன் கூடிய 50MP செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.பின்புற மற்றும் செல்ஃபி ஷூட்டர்கள் அண்டர் வாட்டர் போட்டோகிராபி எடுக்கும் வகையில் வாட்டர் ரெசிஸ்டன்ட் தன்மை கொண்டவை.ஆகவே, IP68 ரேட்டிங்குடன் IP69 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டனுடன் வருகிறது.
மெயின் கேமராவின் அம்சங்களைப் பார்க்கும்போது, 4K வீடியோ பதிவு கிடைக்கிறது. மேலும், அல்ட்ரா HD ஆன்டி-டிஸ்டார்ஷன் செல்ஃபி மற்றும் ஃபிலிம் கேமரா மோட் ஆகியவை கிடைக்கின்றன.
மேலும் இதில் பிரீமியம் வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் கூடுதலாக, டயமண்ட் ஷீல்ட் கிளாஸ் பாதுகாப்பை வழங்குகிறது. SGS ஃபைவ்-ஸ்டார் டிராப் ரெசிஸ்டன்ஸுடன் வருவதால் இது மொபைல் போனை பாதுகாக்கிறது. மேலும் இது பிரீமியம் மாடலாக இருப்பதால் ஸ்மார்ட் AI உடன் வருகிறது.
இது AI டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட், லைவ் கால் டிரான்ஸ்லேஷன் மற்றும் AI எரேசர் மற்றும் சர்க்கிள் டு சர்ச் போன்ற அம்சங்களுடன் வருகிறது. மேலும் இதன் வடிவமைப்பு விவரங்கள் பிரீமியம் பின்புற பேனலுடன் சபையர் நீல நிறத்தில் குறிப்பிட்டுள்ளன.
இந்த அம்சங்களுடன் கூடிய Vivo V50e ஏப்ரல் 10 ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது.ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 SoC சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 OS போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.மேலும் இது 90W வேகமான சார்ஜிங் வசதி மற்றும் 5,600mAh பேட்டரியுடன் வருகிறது.இதன் விலை நடுத்தர பட்ஜெட்டில் வருவதால் சாமானிய மக்களும் அதிக வசதிகள் கொண்ட இந்த மொபைல் போனை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
FOLLOW US ON MORE :
Telegram id : https://t.me/sgnewsinfoo
Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL
Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==