மலாக்காவில் கோர விபத்து!! 7 பேர் பலி!!

மலாக்காவில் கோர விபத்து!! 7 பேர் பலி!!

மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் உள்ள விரைவுச்சாலையில் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி(நேற்று) இரவு வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் கோர விபத்து நேர்ந்துள்ளது.

ஒரு லாரி, சுற்றுலாப் பேருந்து மற்றும் மூன்று கார்கள் விபத்துக்குள்ளானது.

லாரியின் வலது டயர் கழன்று சாலையின் நடுவே விழுந்ததாக கூறப்படுகிறது.

அவ்வழியே சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து லாரியின் டயர் மீது மோதியதால்,அது அடுத்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த மூன்று கார்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சிங்கப்பூரைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

பலியானோர்களில் ஒரே காரில் வந்த இரண்டு வயது குழந்தை உட்பட ஐவரும், பேருந்து ஓட்டுநரும் அடங்குவர்.

மேலும் 33 பேர் காயமடைந்துள்ளனர்.மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தால் வடக்கு திசையில் 10 கிலோமீட்டர் தொலைவு வரை வெகு நேரமாக வாகனங்கள் நெரிசலில் சிக்கின.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.