உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய போலி மாத்திரைகள்!! இணையத்தில் இருந்து நீக்க உத்தரவு!!

உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய போலி மாத்திரைகள்!! இணையத்தில் இருந்து நீக்க உத்தரவு!!

சிங்கப்பூர் : வலி நிவாரண மாத்திரைகளான “Ayukalp Mahayograj Guggulu” என்ற மாத்திரைகளையும் மற்றும் போலி “LACTOGG” என்ற மாத்திரைகளையும் உட்கொண்டவர்கள் மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்த மாத்திரைகளை பரிசோதித்த போது அதில் ஈயம் அளவிற்கு அதிகமாக இருப்பதை சுகாதார ஆணையம் கண்டறிந்துள்ளது.

“Ayukalp Mahayograj Guggulu” என்ற மாத்திரைகளை முதுகுவலியின் காரணமாக உட்கொண்ட பெண்மணிக்கு திடீரென நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவர் சுமார் ஒன்றரை மாதமாக அந்த மாத்திரையை உட்கொண்டு வந்துள்ளார்.

அவர் உட்கொண்ட மாத்திரைகள் பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையில் அந்த மாத்திரையில அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவிலான ஈயம் கலந்து இருப்பதை கண்டறிந்தனர்.


இதே போன்று மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் “LACTOGG” என்ற மாத்திரைகளை உட்கொண்டதால் மோசமாக பாதிக்கப்பட்டனர்.

போலி LACTOGG மாத்திரைகளையும், Mahayograj Guggulu மாத்திரைகளையும் வாங்குவதைப் பொதுமக்கள் தவிர்க்கும்படி ஆணையம் கேட்டுக்கொண்டது

Shoppee இணைய விற்பனைத் தளத்தில் அந்த போலி மாத்திரைகள் விற்கப்பட்டன. அவைகளை உடனடியாக தளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இணையத்தில் மாத்திரைகள் வாங்கும் போது அவை உண்மையானவை என்பதை உறுதி செய்வதும், நம்பகமான விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கப்படுவதை உறுதி செய்வதும் முக்கியம் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


பொதுமக்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார ஆணையம் வலியுறுத்துகிறது.

அதிக அளவு ஈயம் கொண்ட மாத்திரைகளை உட்கொள்வதால் மோசமான வயிற்று வலி, குமட்டல், ரத்தச்சோகை, வாந்தி, கல்லீரல் அலர்ஜி, மூளை பாதிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என சுகாதார ஆணையம் கூறியது.