சிங்கப்பூரில் அதிகரிக்கும் போலித் திருமணங்கள்..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் போலித் திருமணங்கள்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போலித் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் நீண்ட காலம் தங்குவதற்காக குடிநுழைவு அனுமதி பெற சில போலி திருமணங்கள் நடைபெறுகின்றன.

இதுபோன்ற போலி திருமணங்களை ஒரு கும்பல் நடத்துவதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தற்போது வரை 32 பேர் கைது செய்யப்பட்டதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

2023 ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 7 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 13 பேர் பிடிபட்டனர்.

அவர்கள் அனைவரும் 22 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள்.

அவர்களில் வியட்நாமைச் சேர்ந்த 6 பெண்களும் சிங்கப்பூரைச் சேர்ந்த 7 ஆண்களும் அடங்குவர்.

சிங்கப்பூரில் போலித் திருமணம் பதிவு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==