தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!!

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!!

TPE தெம்பனீஸ் விரைவுச்சாலையில் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அந்த இருவரில் ஒருவர் 31 வயது பெண் , மறறொருவர் 59 வயதுடைய டாக்ஸி ஓட்டுநர்.

இச்சம்பவம் குறித்து ஏப்ரல் 16 ஆம் தேதி (நேற்று) முற்பகல் 11.05 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.

இந்த விபத்தில் இரண்டு கார்கள்,ஒரு டாக்ஸி,நான்கு லாரிகள் சம்மந்தப்பட்டன.

இந்த விபத்து தெம்பனீஸ் விரைவுச்சாலையில் இருந்து சிலேத்தார் விரைவுச்சாலை செல்லும் வழியில் பொங்கோல் ரோடு எக்ஸிட் பகுதியில் நேர்ந்தது.

கூ தெக் புவாட் மருத்துவமனைக்கு இருவர் கொண்டு செல்லப்பட்டனர் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது.

மேலும் லேசான காயமுற்ற நபர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

இச்சம்பவம் குறித்த வீடியோ ‘SG Road Vigilante’ முகநூல் பக்கத்தில் ஏப்ரல் 17 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டது.

கார் மற்றும் டாக்ஸி லாரிகளுக்கு இடையே மோசமாக சேதமடைந்து இருப்பதை காணலாம்.மேலும் காரின் மேல் டாக்ஸி சேதமடைந்து இருப்பதையும் காணலாம்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்தது.

சமீப காலமாக விரைவுச்சாலைகளில் விபத்து நடப்பது வாடிக்கையாகிவிட்டது.