தைவானில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம்!! குறைந்தது 4 பேர் பலி!!
தைவானின் தைச்சங் பகுதியில் அமைந்துள்ள மாலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்ததாக தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த மாலில் 12 வது தளத்தில் உள்ள உணவகத்தில் காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
விபத்து நடந்த அந்தப் பகுதி கட்டுமான பணிக்காக மூடப்பட்டது.
இந்த வெடிவிபத்து குறித்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் ஜன்னல்கள் உடைந்து விழுந்திருபத்தை காணலாம். மேலும் பலத்த சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது.
மாலின் ஃபுட்கோர்ட்டில் எரிவாயு தொட்டியை மாற்றும் பணியின் போது வாயு கசிவு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக லிபர்ட்டி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அனுப்பட்டதாகவும்,விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்தது.
வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.