OCBC,UOB வங்கிகள் வெளியிட்ட அறிவிப்பால் ஊழியர்கள் குஷி…!!! 24/12/2024 / #sgnewsinfo, #Singapore, #Singaporenews, #worldnews OCBC,UOB வங்கிகள் வெளியிட்ட அறிவிப்பால் ஊழியர்கள் குஷி...!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் OCBC, UOB வங்கிகள் பணவீக்கத்தை சமாளிக்க இளம் ஊழியர்களுக்கு ஒருமுறை சிறப்பு போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.அவர்களுக்கு சிறப்பு ஊதியமாக 1,000 வெள்ளி வழங்கப்படவுள்ளது.இத்திட்டத்தால் புதிய பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க ஊழியர்கள் பயனடைவர்.தகுதியான ஊழியர்கள் 2025 பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சிறப்பு போனஸ் தொகையை பெறுவார்கள்.இரண்டாவது ஆண்டாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.இதனால் சிங்கப்பூரில் உள்ள 4,000 ஊழியர்கள் பயனடைவார்கள் என்று OCBC தெரிவித்துள்ளது. உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய போலி மாத்திரைகள்!! இணையத்தில் இருந்து நீக்க உத்தரவு!! UOB வங்கி இதேபோல் ஊழியர்களுக்கு தினசரி செலவுகளை ஈடுகட்ட 1,000 வெள்ளி தருவதாக அறிவித்தது.இதனால் 6,000 பேர் பயனடைவார்கள் என UOB வங்கி தெரிவித்துள்ளது.சிங்கப்பூரில் கடந்த மாதம் இரண்டு சதவீதத்திற்கும் குறைவாக விலைவாசி உயர்வு பதிவானது.இது மூன்று ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவாகும்.இந்த சிறப்பு ஊதிய தொகை அறிவிப்பால் வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சிங்கப்பூரின் நவம்பர் மாதப் பணவீக்கம்!!