புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீக்கு இரையான மின்சார வாகனம்!!

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீக்கு இரையான மின்சார வாகனம்!!

பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி சுமார் 9.20 மணியளவில் சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுசாலையில் டைரி பார்ம் சாலைக்கு செல்லும் வழியில் மின்சார வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது என்று சிங்கப்பூர் தற்காப்பு படை தெரிவித்தது.

இந்த சம்பவத்தால் தீவு விரைவுசாலை நுழைவாயில் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

மின் வாகனத்தின் மேல் போர்வையை போர்த்தி நெருப்பானது மேலும் பரவாமல் இருப்பதை தடுத்தனர்.தீயை அணைக்கும் பணியில் மூன்று தண்ணீர் பீச்சியடைக்கும் குழாய்கள் பயன்படுத்தப்பட்டது என்றும் குடிமை தற்காப்பு படையினர் தெரிவித்தனர்.

மின்வாகனத்தில் எரிந்து கொண்டிருக்கும் பேட்டரியில் நேரடியாக தீயை அணைப்பதற்கான சிறப்பு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது என்று தற்காப்பு படையினர் கூறினர்.

மின்சார வாகனத்தில் நெருப்பு அணைக்கப்பட்ட பிறகு மீண்டும் தீ பிடிக்காமல் இருப்பதற்காக வாகனத்தின் மீது தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

வாகனம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டது.

இந்த தீ விபத்தில் ஒருவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டதாகவும் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார்.

மக்கள் தங்களது வாகனங்களில் தீயணைப்பு கருவியை வைத்திருக்கும் படி குடிமை தற்காப்பு படை கூறியது.