அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கிடாதீங்க!!

அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கிடாதீங்க!!

இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை அவசரப்பட்டு நியமிக்க கூடாது என பிரபல ஜோதிட நிபுணர் கிரீன்ஸ்டோன் லோபோ எச்சரித்து இருக்கிறார்.

மேலும் இந்திய அணியில் கேப்டன்களாக வரக்கூடிய யோகமுடைய நான்கு பேர் இருக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மை காலமாக விளையாட்டுப் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஜோதிடர்களிடம் கேட்பது ஒரு பொதுவான வழக்கம்.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் கிரீன் ஸ்டோன் லோபோ என்ற ஜோதிடரிடம் ஒரு பேட்டி எடுக்கப்பட்டிருந்தது.

அந்த பேட்டியில் கிரிக்கெட் தொடர்பான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பிறந்த ஆண்டு மற்றும் மாதத்தை வைத்து அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறினார்.

தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா விரைவில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

90 களின் பிற்பகுதியில் அதாவது 1999 இல் பிறந்த சுப்மன் கில்லை அவசரப்பட்டு கேப்டனாக நியமிக்கக்கூடாது என்றும்,அவருக்கு முன் பிறந்த நான்கு வீரர்களுக்கு கேப்டன் ஆகும் தகுதி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுப்மன் கில் 90களின் இறுதியில் செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர் .
அவருடை ஜாதகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால்தான் அவருக்கு துணை கேப்டன் பதவி கிடைத்து இருப்பதாக அவர் கூறினார்.

எதிர்காலத்தில் அவருக்கு கேப்டன் பதவி கிடைத்தாலும் அதை இந்த ஜாதகத்தை வைத்து புரிந்து கொள்ளலாம்.

கே எல் ராகுல் 1992ல் பிறந்தவர் அவரது ஜாதகம் சிறப்பாக உள்ளது என்றும் அதேபோல ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகிய இருவரும் 1993 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள். ஸ்ரேயாஸ் 1994 ஆம் ஆண்டு பிறந்தவர்.

அவர்கள் நான்கு பேரின் எதிர்காலமும் சக்தி வாய்ந்ததாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில் பார்த்தால் இந்திய அணியில் ஏற்கனவே கேப்டனாகும் வாய்ப்பு உடைய நான்கு பேர் இருக்கிறார்கள். அவர்கள் உலக கோப்பையை இந்திய அணிக்கு பெற்று தருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே சுப்மன் கில்லை கேப்டனாக்க இப்போது சரியான நேரம் இல்லை என்று எச்சரித்தார்.