அமெரிக்காவில் உள்நாட்டு உதவி திட்டங்கள் தொடர வாய்ப்பு..!!!
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கிட்டத்தட்ட அனைத்து உள்நாட்டு உதவித் திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான முடிவு கைவிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உதவித் திட்டங்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய தற்காலிக தடை விதிப்பதாக திரு.டிரம்ப் கூறினார்.
இருப்பினும், சட்டரீதியான சவால்கள் மற்றும் எதிர்ப்புகளுக்குப் பிறகு சமீபத்திய முடிவு எடுக்கப்பட்டதாக திரு.டிரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.