நோயாளிக்கு முறையான சிகிச்சை வழங்கத் தவறிய மருத்துவருக்கு 3 மாத தடைவிதிப்பு..!!!

நோயாளிக்கு முறையான சிகிச்சை வழங்கத் தவறிய மருத்துவருக்கு 3 மாத தடைவிதிப்பு..!!!

சிங்கப்பூர்:நோயாளியின் தலை மற்றும் கால் விரலில் இருந்து ஊசிகளை அகற்றத் தவறிய சீன பாரம்பரிய மருத்துவருக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் உடலில் இருந்து அனைத்து ஊசிகளும் அகற்றப்படுவதை உறுதி செய்ய சுவா காகே தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

செப்டம்பர் 19, 2021 அன்று, நோயாளி சுவாவிடம் சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது.

நோயாளி சிகிச்சை பெற்ற பின்பு தலைசுற்றல், தலைவலி மற்றும் வாந்தி போன்ற உபாதைகளை அனுபவித்ததாகப் பாரம்பரியச் சீன மருத்துவ வாரியம் தெரிவித்துள்ளது.

நோயாளியின் தலையில் இருந்து ஊசியைச் சுவா அகற்றவில்லை.

வீட்டுக்குச் சென்ற பிறகும் தலைவலி நீடித்ததால் இரவு 10 மணிக்கு மருந்தகத்துக்குத் திரும்பினார்.

நோயாளியின் தலையில் இருந்த ஊசியை சுவாவின் ஊழியர்கள் அகற்றினர்.

பின்னர் அக்டோபர் 9 ஆம் தேதி வரை நோயாளிக்கு தலைவலி தொடர்ந்ததால் பாரம்பரியச் சீன மருத்துவ வாரியத்திடம் புகார் அளித்தார்.

இச்சம்பவத்தின் பின்னர் நோயாளிகளுக்கு சரியான மருத்துவ உதவியை வழங்க சுவா தவறியதாக வாரியம் குறிப்பிட்டது.

மேலும் 3 மாத தடையுடன், சம்பவம் தொடர்பான விசாரணைக்கான செலவையும் சுவா நிறுவனம் ஏற்க வேண்டும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==