Samsung tv உங்க வீட்ல இருக்கா.....சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ள புதிய அறிவிப்பு!!
சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் மானிட்டர்களை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஹெச்டி ஆர் 10 பிளஸ்(HDR10+) ஃபார்மெட்டின் கீழ் நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை கண்டு ரசிக்கலாம் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த சாம்சங் மானிட்டரில் அதிக அளவு கான்ட்ராஸ்ட், ஆழமான கலர்கள் மற்றும் ஈர்க்கக்கூடிய விஷுவல் டெப்த்தை காண முடியும்.
நெட்பிளிக்ஸ் HDR10 பிளஸ் வியூவிங் ஃபார்மேட் 2025 சாம்சங் நியூ க்யூஎல்இடி, ஓ எல் இ டி, லைப் ஸ்டைல் ஆகிய மாடல்களிலும் அதேபோல 2024 2025 என்ற மானிட்டர் மாடல்களிலும் கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹச்டிஆர் 10 பிளஸ் என்பது ராயல்டி இல்லாத ஹை டைனமிக் ரேஞ்ச் தொழில்நுட்பம் ஆகும். இது சாம்சங் நிறுவனத்தால் அமேசான் வீடியோவுடன் இணைந்து உருவாக்கப்பட்டது
இதில் netflix மட்டும் இல்லாமல் அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் கூகுள் பிளே மூவிஸ் அண்ட் டிவி ஆகியவற்றிலும் எச்டிஆர்10 + இருக்கும்.
டைனமிக் மெட்டா டேட்டாவை இது பயன்படுத்துகிறது.
பிரைட்னஸ், கான்ட்ராஸ்ட் மற்றும் கலர்-ஐ காட்சிக்கு காட்சி மாறுபடும் என்று கூறப்படுகிறது.
பரந்த அளவிலான வண்ணங்கள் மற்றும் மென்மையான சாய்வுகளை உடையது.அதேசமயம் எச்டிஆர் 10 பிளஸ் ஆனது 10 ஃபிட்டிலேயே உள்ளது.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் டபிள்யூடபிள்யூ இ (WWE) என்று சுருக்கமாக அழைக்கப்படும் World wrestling Entertainment க்கான பிரத்யேக ஸ்ட்ரீமிங் தளமாக netflix ottd தளம் விளங்கும்.