வரலாறு படைத்த தோனி…. ரெய்னா ரெகார்ட்டை முறியடித்தார் தோனி…

வரலாறு படைத்த தோனி.... ரெய்னா ரெகார்ட்டை முறியடித்தார் தோனி...

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

சுரேஷ் ரெய்னாவின் நீண்ட கால சாதனையை தோனி முறியடித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா 176 போட்டிகளில் 4687 ரன்கள் எடுத்திருந்தார்.

இதுவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு வீரர் குவித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.

அந்த சாதனையை தோனி அவர்கள் முறியடித்து உள்ளார்.

தோனி 236 போட்டிகளில் 4697 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் அடுத்து மூன்றாவது இடத்தில் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் இருக்கிறார்.

அவர் சிஎஸ்கே அணிக்காக 2721 ரன்களை குவித்திருக்கிறார்.

நான்காவது இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் இருக்கிறார்.அவர் 2433 ரன்களை எடுத்து இருக்கிறார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடிய போது தோனி அவர்கள் ஒன்பதாவது வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார்.

இதற்கு முன்னர் ஒரு முறை ஒன்பதாவது வரிசையில் அவர் பேட்டிங் செய்தார்.

நேற்று முன்தினம் 9வது வரிசையில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

இதற்கு முன்னால் நடந்த போட்டியில் ஒன்பதாவது வரிசையில் களமிறங்கிய தோனி ரன்கள் எடுக்கவில்லை.

தோனி ஐபிஎல் தொடரில் நான்காம் வரிசை மற்றும் ஐந்தாம் வரிசையில் அதிக ரன்களை சேர்த்திருக்கிறார்.

நான்காம் வரிசையில் 66 இன்னிங்ஸ்களில் 1559 ரன்களை சேர்த்திருக்கிறார்.

இதில் அவரது சராசரி 36.3 ஆகும்.