புறப்படும் விமானம்!! கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என கத்திய பயணி!! அதிருப்தி அடைந்த சக பயணிகள்!!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து பயணி ஒருவர் வெளியேற்றப்பட்டார்.அவர் விமானத்தில் இருந்த சிப்பந்திகளிடம் மோசமாக நடந்து கொண்டதாலும்,மேலும் ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் தைவானிலிருந்து ஷங்ஹாய் நகருக்கு செல்ல வேண்டிய பயணம் சுமார் 2 மணி நேரம் தாமதமானதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது.அந்த பயணியின் செயலை அதில் காணலாம்.
விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது பயணி ஒருவர் கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்று பணியாளர்களிடம் கூறுகிறார்.அது மட்டுமல்லாமல் கதவைத் தட்டி பணியாளர்களைச் சத்தமாக திட்டுகிறார்.